ஒரே பெண்ணை 2 முறை பலாத்காரம் செய்த கும்பல்: ஜாமீனில் வெளியே வந்து வெறிச்செயல்
செவ்வாய், 19 ஜூலை 2016 (08:48 IST)
20 வயது தலித் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து ஜெயிலுக்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே பெண்ணை பலாத்காரம் செய்த சாம்பவம் நடந்துள்ளது.
அரியானாவில் உள்ள ரோட்டக்கில் 20 வயது பெண் ஒருவரை 5 பேர் கும்பல் ஒன்று கடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கல்லூரி அருகே வைத்து பலாத்காரம் செய்து சுக்புரா என்ற இடத்தில் புதர் பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
அவ்வழியாக வந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்த பெண் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அனில், மாசம் குமார், ஜக்மோகன், சந்தீப், ஆகாஷ், சந்தீப் சிங் ஆகிய 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த 5 பேரும் கடந்த 2013-ஆம் ஆண்டு இதே பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது இவரை கடத்திக்கொண்டு போய் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டியதால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர்கள் தறபோது ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.