கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்.. 144 தடை உத்தரவு அமல்..!

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:36 IST)
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
பெங்களூரு மற்றும் மண்டியாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் சுமார் 500 பேருந்துகள், ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் நீலகிரி தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்