42 வருடங்கள் கழித்து கொலை வழக்கில் தீர்ப்பு.. 90 வயது முதியவருக்கு ஆயுள்தண்டனை..!

வியாழன், 8 ஜூன் 2023 (07:33 IST)
42 ஆண்டுகள் கழித்து கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாத்பூர் என்ற கிராமத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு பட்டியல் இனத்தவர் 10 பேர் கொல்லப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த வழக்கில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் 90 வயதான கங்கா தயால் என்பவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கில் மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 9 போர் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையிலே இறந்துவிட்டனர். உயிரோடு இருக்கும் கங்கா தயால் மட்டும் ஆயுள் தண்டனை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற தண்டனையை பெற்றுள்ளார். பணத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 13 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்