86 வயது மூதாட்டி 2 மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட்; ரூ.20 கோடி மோசடி!

Prasanth Karthick

வியாழன், 20 மார்ச் 2025 (11:46 IST)

மும்பையில் 86 வயது மூதாட்டியை டிஜிட்டல் அரெஸ்ட் செய்த மோசடி கும்பல் ரூ.20 கோடி வரை பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையை சேர்ந்த 86 வயது மூதாட்டிக்கு போன் செய்த நபர் தனது பெயர் சந்தீப் ராவ் என்றும், தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் கூறி, மூதாட்டி பெயரில் போலி பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதால் அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி ஒரு அறையில் சென்று அமர சொல்லியிருக்கிறார். 

 

அதன்பின்னர் அவரை நம்ப வைக்க வழக்கு நடந்துக் கொண்டிருப்பது போல செட் செய்துள்ளார்கள். தொடர்ந்து மூதாட்டியை மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறிக்க தொடங்கியுள்ளதுடன், வீட்டை விட்டு வெளியே சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.

 

கடந்த 2 மாதங்களாக தினசரி 3 மணி நேரம் இதுபோல வாட்ஸப் வீடியோ கால் செய்து மூதாட்டியை நம்ப வைத்துள்ளனர். அவரது செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தார் விசாரித்தபோது, அவர் உண்மையை சொல்ல, உடனே இதுகுறித்து அவர்கள் சைபர்க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

 

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் சயான் ஷைக், ரஸீக் பட் என்ற இரு இளைஞர்களை சமீபத்தில் கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில் இதுபோல டிஜிட்டல் கைது மோசடி மூலமாக ரூ.20 கோடி வரை பல நபர்களிடமிருந்து அவர்கள் பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்