இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்: மத்திய அரசு தகவல்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:54 IST)
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு வாரமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மாநில அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 கோடிக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் 80 து சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்