இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிக்கு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை மடக்கி போலீசார் சோதனை செய்துள்ளனர். அந்த லாரியில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 84 பேர் இருந்துள்ளனர். அவர்களை போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட தமிழர்கள் நாங்கள் கூலி வேலை செய்யவதற்காக அந்த லாரியில் வந்ததாக கூறுகின்றனர்.