மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் என்ற தொழிலதிபர், தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தார். அங்கே கொண்டாட்டத்தை பார்த்து ரசித்து விட்டு லிஃப்ட்டில் தரை தளத்திற்கு வர முயன்றபோது, 70 அடி உயரத்தில் இருந்த லிஃப்ட், அறுந்துப்போய் முழு வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் புனித் அகர்வால் உட்பட அவருடைய குடும்பத்தினரான பாலக் அகர்வால், பல்கேஷ் அகர்வால், நவ், நித்தி, கௌரவ், ஆரியவீர் ஆகியோர் சிக்கினர். இதில் நித்தி மட்டும் உயிருக்கு போராட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.