பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து, டெல்லி ஜி.பி. சாலையில் சிலர் விபசார தொழில் செய்வதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விபசாரத்திற்காக, நேபாளம், வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து இவர்கள் விபசார தொழில் செய்து வந்துள்ளனர். விபசாரத்தில் 5000 பெண்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இப்பெண்கள் மூலம் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர். இவர்களுக்கு பல மாநிலங்களில் சொத்துகள், சொகுசு கார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.