பட்ஜெட்டால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி இழப்பீடு

செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (12:36 IST)
கடந்த 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர்களை கண்டுகொள்ளாமல், பெரிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகஃ காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பட்ஜெட் தினத்தன்று காலை சற்று உயர தொடங்கிய பங்குச்சந்தை பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போதே இறங்கத்தொடங்கியது. பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்  1,208 புள்ளிகள் இறங்கியுள்ளது. இதனால் முதலீட்டார்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் பங்குச்சந்தை அதிக புள்ளிகள் வீழ்ச்சி அடைவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்