300 கார்கள் எரிந்து சாம்பல்...நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு...

ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (15:11 IST)
பெங்களூரில் 300 கார்கள் எரிந்து சாம்பல் ஆன இடத்தை, இன்று நேரில்  பார்வை இட்டார் நிர்மலா சீதாராமன்.
கார்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள யெலஹாங்காவில் ஏரோர் ஷோ 2019 என்ற பெயரில் விமானப்படை கண்காட்சி நடத்தி வருகிறது.  இதில் நேற்றி பல லட்சணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது மைதானத்தில் 300 கார்கள் அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சமயம் திடீரென்று ஏற்பட்ட தீயில் 300 கார்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. 
இந்நிலையில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்ரு பார்வையிட்டார். மேலும் இவ்விபத்துக்கான காரணங்களையும், விவரங்களையும் கேட்டு அறிந்தார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்