வாக்காளர் பட்டியலில் எல்.கே.ஜி படிக்கும் சிறுமி: அதிர்ச்சி தகவல்!

ஞாயிறு, 5 ஜனவரி 2020 (09:24 IST)
வாக்காளர் பட்டியலில் அவ்வப்போது குளறுபடிகள் இருந்து வருகிறது என்பதும் தேர்தல் நாளன்று விஐபிக்கள் உள்பட பலர் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பிரச்சினை செய்து வருவதும் வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமி ஒருவர் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இந்த வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து, பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த மாதிரி வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமி நந்திதா என்பவரின் பெயர் மற்றும் புகைப்படம் இருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளான இந்த சிறுமியின் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் எப்படி இணைந்தது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது
 
வாக்காளர் பட்டியலில் தனது 3 வயது எல்,கே.ஜி படிக்கும் மகளின் பெயர் மற்றும் புகைப்படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தேர்தல் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் சிறுமியின் தந்தையிடம் பதிலளித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த குளறுபடியால் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்