தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் முக்கிய விவசாய பகுதியான குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் காசர்கோடு, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களை தவிர, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம் உள்பட மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேய்மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 19 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 2 நாளில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.