பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் அபராதம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீரை வைத்து கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்காக சில குடும்பத்தினர் குடிநீரை வீணாக்கி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தையும் குடும்பத்திற்கும் 5000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது தொடர்ந்து இதே தவறை செய்து வந்தால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.