ஸ்மார்ட்போன்கள் நவீன காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கத்தை வகித்து வருகிறது. அதுவும் குழந்தைகளை வீடியோ கேம்கள் அடிமையாக்கி வைத்துள்ளன. அதில் முக்கியமான விளையாட்டாக பப்ஜி இருந்து வருகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த விளையாட்டை நேரங்காலம் பார்க்காமல் விளையாடும் போக்கு அதிகமாகியுள்ளது.
இதைப்போல மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுஷ் நகரத்தில் வசித்து வரும் ஹருன் குரேசி ரஷீத் என்பவரின் மகன் வர்மூன் எனும் 16 வயது மாணவன் பப்ஜி கேமுக்கு அடிமையாக இருந்துள்ளான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பப்ஜி விளையாடுவதே அவனது வாடிக்கை. அதைப் போல கடந்த புதன்கிழமை தொடர்ந்து 6 மணிநேரம் விளையாடியபோது நெஞ்சு வலிக் காரணமாக உயிரிழந்துள்ளான். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.