ஒரே ஒரு நபரால் 1500 பேருக்கு கொரோனா பாதிப்பா? மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

சனி, 4 ஏப்ரல் 2020 (16:34 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் துபாயில் இருந்து திரும்பி வந்த ஒருவர் தனது சொந்த ஊரில் 1500 பேருக்கு விருந்து வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த நபருக்கு தற்போது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதால் விருந்து சாப்பிட்ட 1500 நபர்களும் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் கடந்த 17ஆம் தேதி துபாயில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளார். அவர் தனது மறைந்த தாயின் நினைவாக அவருடைய கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து மார்ச் 20ஆம் தேதி மிகப் பெரிய விருந்து நடந்தது. இந்த விருந்தில் சுமார் 1500 பேர் பங்கேற்று சாப்பிட்டதாக தெரிகிறது
 
இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி சுரேஷ் திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் சோதனை செய்ததில் அவரது குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனால் அவர் வைத்த விருந்தில் சாப்பிட்ட 1500 பேருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுளது. இதனை அடுத்து அந்த 1500 பேரும் தற்போது சுற்றிவளைக்கப்பட்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்