12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

Senthil Velan

ஞாயிறு, 23 ஜூன் 2024 (15:52 IST)
தெலங்கானாவில் தனது 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு, மகள் காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
தெலங்கானாவின் மகாபுப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்.  இவருக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். நரேஷ் ஆபாசப் படங்கள் பார்ப்பதையும், போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்  
 
கடந்த 7-ம் தேதி காலை அருகிலிருந்த மளிகைக் கடை ஒன்றிற்கு தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குத் திரும்பி வரும்போது மகள் காணாமல் போய்விட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். அன்று மாலையிலேயே தன் மகள் காணாமல் போய்விட்டதாகவும், கண்டுபிடித்துத் தரும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
காவல்துறையினர் கடந்த 13-ம் தேதி மியாப்பூர் காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் குழந்தையின்  உடலை கண்டறிந்தனர். விசாரணையில் நரேஷின் மகள்தான் என்பது தெரியவந்தது.  அதன் பின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நரேஷ் தன் மகளைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது
 
அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், தன் மகளைக் காட்டிற்குள் அழைத்துச் சென்ற நரேஷ், அக்குழந்தையைக் கீழே தள்ளி விட்டுள்ளார்.  காயமடைந்த சிறுமியைக் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார். பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டுள்ளார். கொஞ்ச நேரம் கழித்து சிறுமி இறந்துவிட்டதை உறுதி செய்த பின்னர், வீட்டிற்குச் சென்று மகள் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியது அம்பலமானது. 

ALSO READ: மீனவர்கள் கைதுக்கு கண்டனம்..! ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்..! ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு..!!
 
போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நரேஷ் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்