கேரள மாநிலம் கலாமசரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அப்பெண் 18 வயது பூர்த்தி அடையும் முன்பே, அதாவது 17 வயதிலேயே குழந்தை பெற்றதை மருத்துவமனை நிர்வாகம் கண்டு பிடித்தது.
18 வயது பூர்த்தி அடையாத இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு, சிறுவன்தான் காரணமா இல்லை வேறு யாராவது அதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.