மேற்கு வங்கத்தில் புயல் காரணமாக 98 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . கொல்கத்தா, ஹவுரா நகரில் உள்ள வீடுகள், மரங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளது.
மேலும்,அங்கு மின்கம்பங்கள் அதிகமாக சாய்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பால் இதுவரை குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர்.
இதனால் அங்கு ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பலத்த புயல் மழை பெய்துள்ளது.