திருப்பதி கோவிலுக்கு 10 எலக்ட்ரிக் பஸ்களை காணிக்கை அளித்த நிறுவனம்..!

செவ்வாய், 28 மார்ச் 2023 (07:48 IST)
திருப்பதி கோயிலில் காற்றின் மாசு கெடக்கூடாது என்பதற்காக 10 எலக்ட்ரிக் பேருந்துகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காணிக்கையாக வழங்கியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் 10 எலக்ட்ரிக் பஸ்களை திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது. ஒரு பேருந்தின் மதிப்பு 1.8 கோடி என்ற இயன்ற விதத்தில் இந்த 10 பேருந்துகளின் மதிப்பு 18 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரி சுப்பா ரெட்டி கூறிய போது திருமலையில் காற்றில் மாசு படிவதை தடுப்பதற்காக இந்த பேருந்துகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அதேபோல் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளோம் என்றும் லட்டு பிரசாதங்களை கூட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளை தந்து கொண்டிருக்கின்றோம் என்றும் 35 பேட்டரி கார்களை தேவஸ்தான அதிகாரிக்கு வழங்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும். காணிக்கையாக வழங்கப்பட்ட எலக்ட்ரிக் பேருந்துகள் அனைத்தும் திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்