இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், அகமதாபாத்தில், தனது தாயை சந்தித்து ஆசி பெற வந்த மோடியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களிடம், இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அடுத்த பிரதமராக உள்ள மோடி பேசினார்.