‘ஆகாஷ்’ ஏவுகணை சோதனை வெற்றி

வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (16:33 IST)
ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திப்பூரில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை தாக்கும், ‘ஆகாஷ்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
FILE

சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஆகாஷ் ஏவுகணை, 60 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை சுமந்து 25 கி.மீ. உயரத்தில் சென்று 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் வீழ்த்தும் அதிநவீன ஆற்றல் படைத்தது.

ஏவப்பட்ட ஆகாஷ் ‘லக்‌ஷயா’ என்ற ஆளில்லா விமானத்தின் உதவியுடன் தொங்க விடப்பட்ட மிதக்கும் இலக்கினை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஆகாஷ் ஏவுகணை வருகிற நாட்களில் மீண்டும் சோதனை செய்யப்படுமென தெரிவிக்கபட்டுள்ளது. இறுதியாக இந்த ஏவுகணை 2012 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்