பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

புதன், 17 ஆகஸ்ட் 2016 (22:01 IST)
பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


 

 
துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் இந்திய வான்பகுதியை நெருங்கிய நேரத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணி, நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 
 
பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது. அதில் தாயின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க  உடனடியாக அருகில் இருந்த ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 
விமானம் தரையிறக்கப்பட்டதும், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்