ராக்கிங் செய்தால் வழக்கு : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனறு கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பசாயத் °.எச்.கபாடியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது.

ராக்கிங் நடக்கும் போது சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது அந்த கல்வி நிறுவன அதிகாரிகளின் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ நேரடிடையாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.

ராக்கிங் தொடர்பாக வழக்குகளை நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் ராக்கிங் செய்யும் எண்ணம் மாணவர்களுக்கு வராது. பாடத்திட்டத்தில் ராக்கிங் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

மாணவர் அனுமதி தொடரபான விளக்க கையேட்டிலேயே நான் ராக்கிங்கில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எழுதிவாங்க வேண்டும். இந்த உறுதிமொழி மீறப்படும் பட்சத்தில் அந்த மாணவர்களை கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்