மும்பை வன்முறையைத் தொடர்ந்து 24 பேர் கைது

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2012 (12:56 IST)
மும்பையில் நேற்று நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 24 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மியான்மரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் ராஸா அகாதெமி என்ற அமைப்பின் சார்பில் மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் சனிக்கிழமை மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில், திடீரென வன்முறை ஏற்பட்டது. ஊடக நிறுவனங்கள் மற்றும் காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு கலவரத்தில் ஈடுபட்டோர் தீவைத்தனர்;

அந்த வழியாகச் சென்ற பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்; வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

இக்கலவரத்தில் போலீஸார், நியூஸ்24 என்ற ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் உள்பட 50 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் இருவர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 24 பேரை கைது செய்த மும்பை குற்றப்பிரிவு போலீஸார் அவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து.

ஆயுதங்களுடன் தாக்கியது என்பன உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்