பெங்களூருவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் கைது

திங்கள், 12 அக்டோபர் 2009 (18:54 IST)
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் துப்பாக்கிகளை கடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தாவூத் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவர்கள் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முகமது அயூப் (28), ஃபைரோஸ் (32), அன்சார் (22) என்ற பெயர் கொண்ட அவர்களிடம் இருந்து ஒரு பிஸ்டல் மற்றும் 3 கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

கர்நாடக மாநிலத்தில் ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்ததும், அமெரிக்க முத்திரையுடன் துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சித்ரதுர்காவில் அருகே மதரஸாவில் தங்கியிருந்து, பல்வேறு பகுதிகளுக்கும் ஆயுதங்களைக் கடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்