பாந்த்ரா-ஒர்லி இணைப்பு பாலம் இன்று திறப்பு

செவ்வாய், 30 ஜூன் 2009 (11:25 IST)
மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ரா - ஒர்லியை இணைக்கும் கடலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அதிநவீன பாலத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார்.

பாந்த்ராவுக்கும், ஒர்லிக்கும் இடையே சுமார் 5.6 கி.மீ. தொலைவிலான இந்தப் பாலம் திறக்கப்படுவதால், வேகமான போக்குவரத்தை ஏற்படுத்துவதுடன் மும்பை நகரில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து கண்காணிப்பு, அவசர சிகிச்சை உதவி, தானியங்கி வரி வசூலித்தல் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் மும்பை நகருக்கு அழகு சேர்ப்பதுடன், இந்திய கட்டுமானத்துறையின் திறனை உலகுக்கு உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

இரவு நேரங்களில் மின்விளக்குகள் லேசர் உதவியுடன் ஒளிரும் வகையில் இந்தப் பாலம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

மும்பையின் மேற்குப் பகுதியையும், தெற்குப் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் அரபிக்கடலின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பாலத்தை சோனியா காந்தி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்