மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி.பு.காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் முன்னாள் பத்திரிக்கையாளரும் தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்தனர்.அடுத்தடுத்த புகாரால் எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இதுபோலவே தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் வெளியானது.
இந்த விவகாரத்தில் எம்.ஜே. அக்பரின் மனைவி மல்லிகாவும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். ’20 ஆண்டுகளுக்கு முன்னால் தினமும் என் கணவருக்கு பின் இரவுகளில் பல்லவி கோகாயிடம் இருந்து அழைப்பு வரும். அதனால் எங்கள் குடும்ப வாழ்வில் பல பிரச்ச்னைகள் எழுந்துள்ளன. இப்போது பல்லவி எதனால் இப்படி பொய் சொல்கிறார் எனத் தெரியவில்லை’ என கூறியிருக்கிறார்.