நீங்க ஜெயலலிதாவ புகழறீங்களா இல்ல இகழறீங்களா? ஒன்னுமே புரியல!

செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (11:14 IST)
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.


 


இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில், தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது, ” தமிழ்நாட்டில் ஒரு பொம்பள (ஜெயலலிதா) முதல்வரா இருந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு வருகிறார். நம்ம கர்நாடகாவில் ஒரு ஆண் முதல்வர் (சித்தராமையா) சாமர்த்தியம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். தண்ணீர் திறக்க சொல்ல உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் தமிழக விவசாயிகளுக்கு எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்?.” என்றார்.

மாண்டியாவில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தால், அம்மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பதற்றத்தை தனிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்