சமீபத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டிவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதே போல் ஃபிட்னஸ் சேலஞ்சை செய்து வீடியோ வெளியிடும்படி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு இந்த சவாலை விடுக்கிறேன் என கூறியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட கோலி, தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு தனது டாஸ்கை முடித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் மோடி, கேப்டன் டோனி ஆகியோரை இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை செய்யும்படி கூறியிருந்தார்.