ஒரு கோடி பேரை திரட்டி ஐதராபாத்தை முற்றகையிடுவோம்: ஐக்கிய ஆந்திரா போராட்டக்க்குழு எச்சரிக்கை

ஞாயிறு, 3 நவம்பர் 2013 (13:20 IST)
முற்றுகை போராட்டம் நடத்தி டெல்லி தலைவர்களை இங்கு வரவழைப்போம் என்று ஐக்கிய ஆந்திரா போராட்டக்குழு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
FILE

ஐக்கிய ஆந்திரா போராட்ட கூட்டு நடவடிக்கை குழு தலைவர் விஜயபாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:

ஆந்திரா மாநிலத்தை பிரிக்க சட்டமன்ற தீர்மானம் தேவையில்லை என காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விடுகின்றனர். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வராவிட்டால் சீமாந்திரா பகுதியை சேர்ந்த ஒரு கோடி பேர் ஐதராபாத் நகரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி டெல்லி தலைவர்களையே ஐதராபாத்திற்கு வரவழைப்போம்.

டெல்லி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதை அப்பகுதி அரசியல் தலைவர்கள் மட்டுமே விரும்புகிறார்கள். அதற்காக தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா பகுதியில் இருக்கிறதே என அவர்களுக்கு நகரத்தை விட்டுக் கொடுக்கிறீர்கள். இந்திய தலைநகர் டெல்லி உத்திர பிரதேசத்தில் உள்ளது. அதற்காக டெல்லியை அந்த மாநிலத்திற்கு விட்டுக் கொடுப்பீர்களா.

சந்திரபாபு நாயுடு ஐக்கிய ஆந்திராவிற்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடும்.

தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக டில்லியில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மாநிலத்தை ஐக்கியமாக வைக்க வேண்டும் என அறிக்கை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்கால சந்ததிகள் உங்களை மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்