ஏர் இந்தியா – விமானிகள் பேச்சுவார்த்தை?

புதன், 4 மே 2011 (18:13 IST)
8வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் விமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண ஏர் இந்தியா நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஏர் இந்தியா தொடுத்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் வயலார் இரவியும் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக விமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.

அமைச்சர் வயலார் இரவி, ஏர் இந்தியா தலைமை மேலாளர் அர்விந்த் ஜாதவ், விமான போக்குவரத்து துறை செயலர் நசிம் ஜைதி ஆகியோருடன் நடத்திய பேச்சிற்குப் பிறகு விமானிகளுக்கு நிர்வாகம் தூது விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விமானிகள் தொழிற்சங்க நிர்வாகி, “பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு அரசு எங்களை அழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்