செங்கோட்டையனுடன் டீல் பேசும் டெல்லி - எடப்பாடி, ஓ.பி.எஸ் அதிர்ச்சி

எம். முருகன்

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (10:49 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையனை முதல்வராக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 


 
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலையில் இருக்கிறது. அதோடு, ஓ.பி.எஸ் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிட்டதாக தெரிகிறது. தினகரன் தனது தரப்பில் 20 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார். இதை சமாளிக்க முடியாமல், இதர எம்.எல்.ஏக்களை தன் பக்கம் வைத்திருக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளது. ஆனால், எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் எனக் கூறமுடியாது.
 
எனவே, அதிமுகவை வைத்து தமிழகத்தில் கால் பதிக்க திட்டமிட்டிருக்கும் பாஜகவிற்கு இந்த விவகாரம் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதுவும், தினகரனும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைத்து விட்டால் அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விடுமே என்ற கவலை அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.


 

 
எனவே, தமிழகத்தில் நடைபெற்றும் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட, யாருக்கும் பிரச்சனை இல்லாத ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைப்பது குறித்து யோசித்துள்ளனர். அதில், அமைச்சர் செங்கோட்டையன் பெயர் அடிபட்டிருப்பதாக தெரிகிறது. 40 வருடங்களுக்கும் மேல் அதிமுகவில் இருக்கும் அவரை பற்றிய நல்ல விதமான அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா வெங்கட்ராமன் மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளார். 
 
எனவே, அவரை டெல்லிக்கு வருமாறு பலமுறை அழைத்தும், தயங்கியபடி அங்கு செல்லாமல் இருந்த செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். தன்னுடைய துறை ரீதியான சந்திப்பு எனக் கூறிவிட்டே அங்கே சென்றார். அவரும், நிர்மலா சீதாராமனும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெரிகிறது. 
 
அப்போது, தமிழகத்தின் முதல்வராக செங்கோட்டையனை நியமிப்பது குறித்து அவரிடம் அமித்ஷா பேசியுள்ளார். ஆனால், செங்கோட்டையன் தயக்கம் காட்ட, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு உணர்ந்தே இருக்கிறதாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்கிற ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
இதில் முக்கியமாக, முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை அகற்றியே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கு டிடிவி தினகரன், செங்கோட்டையனை முதல்வராக நியமிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதற்கு நான் ஆதரவு தருவேன் எனவும் டெல்லியிடம் கூறிவிட்டாராம்.
 
எனவே, அதற்கேற்றார் போல் காயை நகர்த்திக்கொண்டிருக்கிறது பாஜக தரப்பு. தமிழக அரசியலில் என்னென்ன அதிரடி மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்