தனுஷின் அடுத்த படத்தில் பாரதிராஜா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
தனுஷின் அடுத்த படத்தில் பாரதிராஜா: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. தனுஷின் 44வது படமான 'D44' படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தனுஷின் 'D44' படத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் முதலாக தனுஷ் மற்றும் பாரதிராஜா இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்த உள்ளது கோலிவுட் திரையுலகினருக்கு ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டு சேகர் கம்முலா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படங்களில் அடுத்தடுத்து தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்