கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ரிசர்வ் வங்கி தகவல்

வியாழன், 1 ஜூன் 2023 (07:45 IST)
இந்தியாவில் அதிக கடன் வாங்குவதில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
2023 ஆம் நிதி ஆண்டில் அதிக கடன் வாங்கிய முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் தமிழ்நாடு 87 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிரா, மேற்கு வங்காள, ஆந்திர பிரதேச மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக கடன் வாங்கி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
ரிசர்வ் வங்கி மூலம் சந்தைகளில் இருந்து கடன் பத்திரங்கள் மூலம் மாநிலங்கள் நிதி திரட்டுகின்றன என்பதும் அதற்கான வட்டி சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நிதிநிலை வலுவாக இருக்கும் மாநிலங்கள் குறைந்த வட்டியிலும் நிதிநிலை பலவீனமாக உள்ள மாநிலங்கள் அதில அதிக வட்டிகளும் கடன் வாங்குவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்