1 மணி நேரத்தில் அனைத்தும் இலவசம்: வோடாஃபோன் அதிரடி

சனி, 7 ஜனவரி 2017 (15:05 IST)
ஜியோவுக்கு எதிராக அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றனர். தற்போது வோடாஃபோன் நிறுவனம் அதிரடி இலவச திட்டத்தை அறிவித்துள்ளது.


 

 
ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களை தொடர்ந்து வோடாஃபோன் நிறுவனமும் ஜியோவுக்கு எதிராக இலவச சலுகைகளை அறிவித்துள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள எடுத்த முடிவு என்றாலும் மக்களுக்கு இது சாதகமாக மாறி வருகிறது.
 
சூப்பர்-ஹவர் என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 1 மணி நேரத்திற்கு டவுன்லோட் இலவசம். அன்லிமிடெட் இண்டர்நெட் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் இண்டர்நெட் பெற ரூ.16 செலுத்த வேண்டும். அன்லிமிடெட் அழைப்புகள் சேவை பெற ரூ.7 செலுத்த வேண்டும்.
 
இந்த புதிய சேவையை வரும் 9ஆம் தேதி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்