மீண்டும் சரிந்த சென்செக்ஸ்: வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

திங்கள், 3 அக்டோபர் 2022 (09:25 IST)
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிந்தது. ஆனால் பெரிய அளவில் சரிவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைய தேவையில்லை என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்றைய பங்கு சந்தை நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தும் என்று கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 சற்றுமுன் மும்பை பங்குச் சந்தை 60 புள்ளிகள் சரிந்து 57365 0 என்ற  புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 17086 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்