திடீரென 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்: ரெப்போ வட்டிவிகித உயர்வு காரணமா?

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (15:05 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் குறிப்பாக கடந்த 4 நாட்களாக பெரும் சரிவில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று திடீரென மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்திய ரிசர்வ் வங்கி இன்று ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்வு என அறிவித்துள்ளதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1060 புள்ளிகள் உயர்ந்து 57470 என்ற புள்ளிகளில் வர்த்தகம் மாறிவருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 290 புள்ளிகள் உயர்ந்து 17106 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பங்குச்சந்தை திடீரென 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்