நீண்ட சரிவுக்கு பின் 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: தொடர் ஏற்றம் வருமா?

வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:46 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மிக மோசமாக சரிந்தது என்பதையும் இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் நீண்ட சரிவுக்கு பின்னர் இன்று சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்தாலும் தொடர் ஏற்றம் வருமா அல்லது மீண்டும் சரியுமாஎன்ற கலக்கத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர். 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் தொடங்கிய நிலையில் 500 புள்ளிகள் உயர்ந்து 57100 என்ற புள்ளிகளில் வர்த்தம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17,000 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களாக பெரும் நஷ்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று பங்குச்சந்தை ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்