பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் முழுவதுமே ஏற்றத்தில் இருந்து வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 275 புள்ளிகள் உயர்ந்து 72315 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 21,739 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை தொடர் ஏற்றம் பெற்று வருவதை அடுத்து புதிய உச்சம் பெற்று வருகிறது என்பதும் இதுவரை இல்லாத அளவில் பங்குச்சந்தை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் பங்கு சந்தை வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதால் படிப்படியாக முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்