பங்குச்சந்தை மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (11:01 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பங்கு சந்தை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் ஏற்றத்தில் இருந்தது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து 71,385 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 21,452 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தொடர்ந்து பங்கு சந்தை ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தகுந்த பங்குச்சந்தை நிபுணர்களின் ஆலோசனை பெற்று முதலீடு செய்யும் மாறும் அறிவுறுத்தப்படுகிறது.