திடீரென 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் இன்ப அதிர்ச்சி..!

புதன், 15 நவம்பர் 2023 (10:58 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென 500க்கும் மேற்பட்ட புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்தது என்பதும் சற்றுமுன் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 65,493 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 19,620 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக  பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்