தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னை விலை நிலவரம்..!

Siva

திங்கள், 6 மே 2024 (10:15 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. எனவே மீண்டும் சவரன் 53 ஆயிரத்திற்குள் இருப்பதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து 6,610 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 52,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,080 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 87.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருவதால் தான் இந்தியாவில் தங்கம் விலை குறைந்து வருவதாகவும் இன்னும் சில நாட்கள் தங்கம் விலை குறைந்து அதன் பிறகு தான் மீண்டும் உயரும் என்றும் தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது கண்டிப்பாக லாபம் தரும் ஒரு முதலீடு என்றும் தங்கம் எப்பொழுது எல்லாம் இறங்குகிறதோ அப்பொழுதெல்லாம் அதை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் அறிகுறித்துள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்