5வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. தீபாவளிக்கு வாங்க சரியான நேரமா?

புதன், 8 நவம்பர் 2023 (11:22 IST)
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக குறைந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் குறைந்துள்ளது. இதனை அடுத்து தங்கம் வாங்க சரியான நேரம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5660.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 45280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6130.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் குறைந்து ரூபாய் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்