ரூ.42000 என சரிந்தது தங்கம் விலை.. இன்னும் விலை குறையுமா?

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (10:29 IST)
தங்கம் விலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சவரனுக்கு 43 ஆயிரம் என இருந்த நிலையில் இன்று 42000 என குறைந்துள்ளது. 
 
பிப்ரவரி 9ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 43 ஆயிரம் என விற்பனையாகிய நிலையில் ஒரே வாரத்தில் ஆயிரம் ரூபாய் குறைந்து 42 ஆயிரம் என குறைந்து உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ரூபாய் 5250.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 சரிந்து  ரூபாய் 42000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5612.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44896.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 71.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்