இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

Mahendran

சனி, 21 டிசம்பர் 2024 (10:39 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று திடீரென ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ₹480 உயர்ந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹7230 என்று இருந்த நிலையில், படிப்படியாக இறங்கி, நேற்று ₹7040 வரை விற்பனையானது. ஆனால், இன்று திடீரென ஒரு கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹7100 ஆக விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கம் ₹56,320 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹480 உயர்ந்து ₹56,800 என விற்பனையாகியுள்ளது.

அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹7745 என்றும், எட்டு கிராம் ₹61,960 என்றும் விற்பனையாகி வருகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹98 என விற்பனையான நிலையில், இன்று ₹1 உயர்ந்து ₹99 ஆகவும், ஒரு கிலோ ₹99,000 என்றும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இறங்கிய நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்