இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில், நேற்று வாரத்தின் முதல் நாளிலும் ஏற்றம் கண்டது. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 226 புள்ளிகள் சரிந்து 80,570 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 68 புள்ளிகள் சரிந்து 24,393 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர்ஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.
அதேபோல், டிசிஎஸ், டாட்டா மோட்டார்ஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எஃப்சி வங்கி, சிப்லா, ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.