போரை கண்டுகொள்ளாமல் உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

புதன், 11 அக்டோபர் 2023 (10:05 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பங்குச்சந்தை ஆட்டம் கண்டது. ஆனால் இந்திய பங்குச்சந்தை இன்று திடீரென உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 410 புள்ளிகள் உயர்ந்து 66 ஆயிரத்து 649 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 19807 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் டாடா கெமிக்கல்ஸ், விப்ரோ, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பங்குகள் ஏற்றத்திலும் பேங்க் ஆப் பரோடா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஐசிஐசிஐ புரூடன்ஷியல் ஆகிய பங்குகள் இறக்கத்திலும் உள்ளன



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்