வாரத்தின் முதல் நாளே சரிவில் செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

திங்கள், 9 அக்டோபர் 2023 (10:56 IST)
இஸ்ரேல் போர் காரணமாக இன்று காலை முதலே பங்குச்சந்தை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை சுமார் 300 புள்ளிகள் இன்று சரிந்து உள்ளது. இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது  மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 713 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி  81 புள்ளிகள் சரிந்து 19,573    என்ற புள்ளிகளில்  வர்த்தகம் ஆகி வருகிறது  .

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இன்று சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மேலும் பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்