ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:25 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை  ஏற்றமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் சிறிய அளவில் மட்டும்தான் ஏற்றம் இருப்பதால் இறங்கவும் வாய்ப்பு உள்ளது. 
 
இன்றைய தேசிய பங்குச் சந்தை நிப்டி 8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 20078 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
அதேபோல் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 5 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 67,471 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில்  எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் குறைந்துள்ளதாகவும்  கோத்ரேஜ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்