சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

புதன், 23 நவம்பர் 2022 (09:47 IST)
இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று மும்பை பங்கு சந்தை சரிவுடன் தொடங்கினாலும் முடியும்போது ஏற்றத்துடன் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. சற்றுமுன் வரை 60 ஆயிரத்து 507 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 30 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 272 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதால் பங்குச்சந்தை அடுத்தடுத்து உயரும் வாய்ப்பு இருப்பதாகவே பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்